உள்ளடக்கத்துக்குச் செல்

சாய் பிரசாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய் பிரசாந்த்
பிறப்பு(1985-06-07)7 சூன் 1985
இறப்பு13 மார்ச்சு 2016(2016-03-13) (அகவை 30)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–2016
வாழ்க்கைத்
துணை
நிரஞ்சனா (மணமுறிவு)
சுஜிதா சாய் பிரசாந்த்

சாய் பிரசாந்த் (Sai Prashanth, 7 சூன் 1985 - 13 மார்ச் 2016) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தோன்றியுள்ளார். இவர் பாரதி, ஐந்தாம் படை, தெகிடி, நேரம் (2013), வடகறி (2014) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தி. நகர், ஸ்ரைன் விலங்கண்ணி மேல்நிலைப் பள்ளி, சிறீ அகோபில மட ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம் போன்ற பள்ளிகளில் பயின்றார். இவரது தந்தை சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையின் தலைமை செயல் அலுவலராக இருந்தார்.

தொழில்

[தொகு]

டி.டி.கே.யில் முக்தா பிலிம்சின் வித்யா என்ற மகா தொடரில் ஒரு குழந்தையின் பாத்திரம் சாய்க்கு கிடைத்த வாய்ப்பாகும். இவர் அகோபில மட ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது, வாரணாசியில் நடந்துவந்த பாரதி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இளம் கவிஞர் பாரதியின் பாத்திரத்தை ஏற்க ஞான ராஜசேகரன், ஐ.ஏ.எஸ். அழைத்தார். மகாராட்டிரத்தின் பிரபல நடிகர் சயாஜி ஷிண்டேவுடன் இணைந்து இவர் அந்த பாத்திரத்தை செய்தார். காசியில் இருந்து திரும்பி வந்த இவர், இளம் கணினி ஆர்வலரான பலக்காடு பையனாக வீட்டுக்கு வீடு லூட்டி தொலைக்காட்சித் தொடரில் ஒரு பாத்திரத்தை ஏற்க இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சனால் பம்பாய் சாணக்யாவுக்கு அழைக்கப்பட்டார்.

இவரது திரைப்பட வாழ்க்கையில் முதல் வேதத்தின் முதல் ஸ்லோகமான "கணனாம் த்வா ... " என்று திரையில், அதுவும் கங்கைக் கரையில் ஓதலுடன் தொடங்கியது.

பொழுதுபோக்கு ஊடகத்தில் சாய் பிரசாந்த் சன் மியூசிக் அலைவரிசையில் தொகுப்பாளர் பொறுப்பை திடீரென ஏற்றுக்கொண்டார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றினார்.

ராடான் நிறுவனத்தின் அண்ணாமலை தொடரில் இவர் ஏற்று நடித்த விளையாட்டுத்தனமான இளைஞர் பாத்திரமானது திடீரென புதிய இயக்குநர் சி. ஜே. பாஸ்கரால் பயங்கர எதிர்மறையான பாத்திரமாக மாற்றப்பட்டது, இது இவருக்கு இளைய நம்பியார் என்ற பெயரை மக்களிடம் பெற்றுத் தந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில், இவர் பெரும்பாலும் எதிர்மறை வேடங்களில் நடித்தார். ராதிகாவின் தயாரிப்புகளில் எடுக்கபட்ட பல தொடர்களில் நடித்தார்.[1] மேலும் சாய் பிரசாந்த் மானாட மயிலாட மற்றும் ஜோடி நம்பர் ஒன் போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக தோன்றினார். மேலும் இவர் தில்தில் மனதில் உட்பட இதர நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.[2]

மேலும் இவர் முன்தினம் பார்த்தேனே (2010), நேரம் (2013), தெகிடி (2014) உள்ளிட்ட படங்களிலும் துணை வேடங்களில் நடித்துள்ளார். வடகறியில் (2014), அவர் முன்னணி எதிர்நாயகனாக தோன்றினார்.[3][4]

குடும்பம்

[தொகு]

இவரது தாய் லலிதா சுபாஷ் தமிழக பாஜகவின் ஒரு தலைவராகவும், பிராந்திய தணிக்கை வாரிய உறுப்பினராகவும் இருந்தார்.[5] நிரஞ்சனாவுடனான இவரது முதல் திருமணத்திலிருந்து இவருக்கு ரக்ஷிதா பிரசாந்த் என்ற மகள் உண்டு.[6]

இறப்பு

[தொகு]

13 மார்ச் 2016 அன்று தனது வீட்டில் நஞ்சருந்தி பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார்.[7]

திரைப்படவியல்

[தொகு]

படங்கள்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2002 பேஸ்கட் செல்வம்
2004 கிரி மாவட்டத்தின் மகன்
2005 தகதிமிதா
2009 ஐந்தாம் படை தினகரன்
2010 முன்தினம் பார்த்தேனே தினேஷ்
2012 ஏதோ செய்தாய் என்னை
2013 நேரம் வெற்றியின் தங்கை கணவர்
2014 தேகிடி கமலகண்ணன்
2014 என்னமோ ஏதோ கௌதமின் மைத்துனர்
2014 வடகறி ரவிசங்கர்
2014 மேகா முகிலனின் நண்பர்
2016 சாகசம்
2017 ஒரு முகத்திரை கிஷோர்

தொலைக்காட்சி

[தொகு]
  • அண்ணாமலை
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • கிருஷ்ணா காட்டேஜ்
  • செல்வி
  • அரசி
  • முகுர்த்தம்
  • இதயம்
  • மகள்
  • தாமரை
  • இளவரசி
  • கேபி ஐயா எழுதிய அண்ணி,
  • மா இன்டி மகாலட்சுமி - தெலுங்கு
  • லட்சுமி நிவாசம்
  • டி.டி.கே.யில் வித்யா
  • அகல்யா
  • ஏ.வி.எம்மின் நிம்மதி
  • விஜயின் கண்ணாடி பூக்கள்
  • விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சி
  • மானாட மயிலாடா - கலைஞர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி.
  • கலைஞர் தொலைக்காட்சியில் தில் தில் மனதில்
  • எதிர்நீச்சல்
  • அமுல் சூப்பர் குடும்பம் சன் தொலைக்காட்சியில் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சித் தொடர்
  • சுந்தர் கே விஜயன் எழுதிய யாழினி - இங்கிலாந்தில் வெளியான ஒரு தொலைப் படம்
  • வீடு மனைவி மக்கள் பிரபலங்களின் குடும்ப ரியாலிட்டி ஷோ.

குறிப்புகள்

[தொகு]
  1. https://www.youtube.com/watch?v=8FtVDBLebfA
  2. http://www.nettv4u.com/celebrity/tamil/tv-actor/sai-prashanth
  3. http://www.indiaglitz.com/mundhinam-paartheney-tamil-movie-review-10915.html
  4. http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-09-02/mun-dhinam-paartheney-12-02-09.html
  5. "Tamil actor Sai Prashanth found dead at his home; 'suicide note' emerges". 14 March 2016.
  6. "Marital discord tied to TV soap actor's suicide". 15 March 2016.
  7. "Tamil TV actor Sai Prashanth kills self; suicide note found". IANS. The Indian Express. 2016-03-14. http://indianexpress.com/article/entertainment/regional/tamil-television-actor-sai-prashanth-commits-suicide/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_பிரசாந்த்&oldid=4161977" இலிருந்து மீள்விக்கப்பட்டது